பதிவு செய்த நாள்
27
ஆக
2016
12:08
சங்ககிரி: தேவூர் அருகே, மாரியம்மன் திருவிழாவில், பக்தர்கள் சுவாமி வேடம் அணிந்து வந்தனர். சங்ககிரி, தேவூர் அருகே, அரசிராமணிசெட்டிப்பட்டி, குள்ளம்பட்டி ஆகிய ஊர்களில், கடந்த, 11ம் தேதி பூச்சாட்டுதலுடன், மாரியம்மன் விழா துவங்கியது. அன்று முதல், தினமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. கடந்த, 24ம் தேதி அம்மனுக்கு பூவேடு விடுதல், 25ம் தேதி பொங்கல் வைத்தல் நடந்தது. நேற்று, கிடாவெட்டியும், அலகுகுத்தியும், அக்னிசட்டி ஏந்தியும், பக்தர்கள், வாகனங்களில் அம்மன், சிவன், பார்வதி உள்ளிட்ட வேடம் அணிந்துவந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.