திருவாசகத்தில் மாணிக்கவாசகர் “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவதினியே” என்று சிவனைக் குறித்துப் பாடியுள்ளார். ஆனால், சிவன் பக்தர்களைச் சிக்கென பற்றிக்கொண்ட தலம் சிக்கல் ஆகும். சிக் என ஓரிடத்தைப் பற்றிக்கொண்டு, அமர்ந்ததால் இவ்வூர் சிக்கல் எனப்பட்டது. இத்தலத்தில் முற்காலத்தில் பால்குளம் ஒன்று இருந்தது. இங்கு வந்த வசிஷ்டர், பாலில் இருந்து வெண்ணெய் திரட்டினார். அதைக்கொண்டு சிவலி ங்கம் வடித்து வணங்கினார். பூஜை முடிந்து, அந்த லிங்கத்தை எடுக்க முயன்ற போது, அது கல்லாக மாறி, சிக்கென ஒட்டிக் கொண்டது. சுவாமிக்கு திருவெண்ணெய்நாதர் என்று பெயர் ஏற்பட்டாலும், சிக் என்று கல்லாக அமர்ந்து விட்டதால் ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது.