பதிவு செய்த நாள்
31
ஆக
2016
12:08
ஏலம்பாக்கம்: ஏலம்பாக்கம், ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், கல்லம்பேடு ஊராட்சிக்குட்பட்ட ஏலம்பாக்கம் கிராமத்தில் உள்ளது ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில். இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவுபெற்று, வரும் 8ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக, 7ம் தேதி, காலை 9:00 மணிக்கு, புண்ணியாவாசனம், வாஸ்து ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை நடைபெறும். தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மகாசாந்தி திருமஞ்சன பூர்ணாஹூதியும் நடைபெறும். மறுநாள் 8ம் தேதி காலை புண்ணியாவாசன கோ பூஜையும், யாத்ராதான சங்கல்ப கும்பம் புறப்பாடும், பின், காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில் ஆதிகேசவ பெருமாள் வீதியுலா நடைபெறும்.