தேனி: தேனியில் கணேச கந்தபெருமாள் கோயிலில் குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிட்டி இந்தியா டிரஸ்ட் சார்பில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ண லீலைகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. பெரியகுளம் நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ண சைதன்யதாஸ் பேசுகையில், “கிருஷ்ண பகவான் நாமத்தை யார் சொல்கிறார்களோ, அவர்களுடைய கஷ்டத்தை பகவான் தீர்த்து வைப்பார். திரவுபதி கஷ்ட காலத்தில் பகவானின் நாமத்தை உச்சரித்தார். பகவான் அவரை காப்பாற்றினார். ஆகையால் நாமும் இந்த மந்திரத்தை உச்சரித்து கஷ்டத்தில் இருந்து விடுபடலாம்” என்றார்.