Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் ஆவணி திருவிழா ... சேதமடைந்த தி.மலை ராஜகோபுர நிலைப்படி கிரேன் மூலம் மரத்தூண் நிறுத்தம் சேதமடைந்த தி.மலை ராஜகோபுர நிலைப்படி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுற்றுச் சூழலை பாதிக்காத.. மாட்டுச் சாணத்தில் தயாரான விநாயகர் சிலைகள்!
எழுத்தின் அளவு:
சுற்றுச் சூழலை பாதிக்காத.. மாட்டுச் சாணத்தில் தயாரான விநாயகர் சிலைகள்!

பதிவு செய்த நாள்

01 செப்
2016
11:09

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் வகையில், பெங்களூரில், மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது; இங்கு, சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்கும் வகையில், கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், சுற்றுச் சூழலுக்கு ஒவ்வாத, ரசாயனங்கள் கலந்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்வோர் மற்றும் அந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும், வரும், 5ல், விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல நிறங்களிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பெங்களூரில், சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில், மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, சிலை விற்பனையாளர்கள் கூறியதாவது: ஆண்டு தோறும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை விற்பனை அமோகமாக இருக்கும். இந்த ஆண்டு, கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த திடீர் உத்தரவால், சிலை விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டது. எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளை விற்பனை செய்வது குறித்து ஆலோசித்தோம். மஹாராஷ்டிர மாநிலத்தில், மாட்டுச் சாணத்தில், விநாயகர் சிலைகள் செய்யப்படுவதை அறிந்தோம். அங்கிருந்து, ஆர்டர் செய்து, நிறைய சிலைகளை வரவழைத்துள்ளோம். குறைந்தபட்சம், 100 ரூபாய் முதல், இந்த சிலைகள் கிடைக்கின்றன. ஹிந்துக்கள், மாட்டுச் சாணத்தை மங்களகரமாக கருதுவதால், இந்த வகை சிலைகளை மிக ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்த சிலைகள் எளிதல் கரைந்துவிடும்; நீர்நிலைகளை மாசுபடுத்தாது. எனவே, வருங்காலங்களில், இவ்வகை சிலைகளின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar