பழநி: பழநி அருகே ஆயக்குடி சோழீஸ்வரர் கோயில் வில்வர மரத்தில் செய்யப்பட்ட சிவலிங்கம், நந்திக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. பழநி ஞானதண்டாயுதபாணி சுவாமி கோயிலைச் சார்ந்த புது ஆயக்குடி சோழீஸ்வரர் கோயிலில் அமாவாசை நாளில் உழவார திருப்பணிக்குழு சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெறும். நேற்றும் திருவாசக முற்றோதுதல் நடந்தது. இதில் சிவபெருமானுக்கு உகந்த வில்வமரத்தில் செய் யப்பட்ட சிவலிங்கம், நந்தி, உடுக்கை- சூலாயுதம் உள்ளிட்டவற்றுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தி ருப்பணிக்குழுவினர் கூறுகையில், பொதுவாக வில்வமரத்து இலைகளால் சிவபெருமானுக்குஅபிஷேகம் செய்வது, வழிபடுவது சிறப்பாகும். அந்த வகையில் சோழீஸ்வரர் கோயிலில் சேதமடைந்த வில்வமரத்தில் செய்யப்பட்ட சிவலிங்கம், நந்தி பகவானை வழிபடுவதை மேலும் சிறப்பாக கரு துகிறோம் , என்றனர்.