கர்நாடக மாநிலம், தொட்டமளூரில் உள்ளது நவநீதகிருஷ்ணன் கோயில். புரந்தரதாசர் ஒரு சமயம் இக்கோயில் கிருஷ்ணனை தரிசனம் செய்யும் சென்றார். அப்போது, கோயில் நடைசாத்தப்பட்டிருந்தது. வருந்திய புரந்தரதாசர், வெளியில் நின்று, ஜகத் தோத்தாரணா என்ற பாடலைப் பாடினார். உடனே, கோயில் கதவுகள் தானாகத் திறந்து கொண்டன. தவழும் கோலத்தில் இருந்த கண்ணன், தனது முகத்தைத் திருப்பி, புரந்தரதாசரைப் பார்த்தானாம். இங்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான வெண்ணெய் நைவேத்தியம் செய்யப்படுகிறது. மகப்பேறு வேண்டுவோர் இக்கோயில் கிருஷ்ணனை வேண்டி பலன் பெறுகின்றனர்.