பிரம்மாவைத் தரிசிக்க சென்ற நாரதர்,“சுவாமி! கலியுகத்தில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய சிறந்த விரதம் எது?” என்று கேட்டார். “புரட்டாசி சனிக்கிழமைகளில் வெங்கடேசப் பெருமாளை நினைத்து அனுஷ்டிக்கும் விரதமே மேலானது” என்று பதிலளித்தார். இதனடிப்படையில் புரட்டாசி சனியன்று, துளசி நீர் பருகி விரதம் மேற்கொள்வர். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகிய நைவேத்யங்களை பெருமாளுக்கு படைப்பர். இந்த விரதம் அனுஷ்டித்தால் கிரகதோஷம் அகலும். ஆயுள், ஆரோக்கியம் கூடும். செல்வ வளம் பெருகும்.