மனிதனுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் காமம், கவலை, கோபம் என்று பல வேண்டாத சிந்தனைகளால் மனித மனம் அலை பாய்கிறது. அது எப்படியாகுமோ? இது எப்படியாகுமோ?” என்ற சஞ்சலமும் அடிக்கடி தலை துõக்குகிறது. ஆனால், குழந்தைகளிடம் இதுபோன்ற எந்த குணமும் இல்லை. எதையாவது கேட்டு அடம் பிடித்து அழுதாலும். ஒரு கிலுக்கை எடுத்து ஆட்டினால் போதும்...கணப்பொழுதில் மறந்து விட்டு சிரித்து விளையாடுகிறது. இந்த குழந்தைகளுக்கு பிடித்த சுவாமியாக விநாயகர் இருக்கிறார். கனமான யானை வடிவில் காட்சியளித்தாலும், மூஞ்சூறு சுமக்கும் விதத்தில் பரமலேசான மனம் உள்ளவராக இவர் இருக்கிறார்.