எத்தனை உறவு தான் உங்களுக்கு இருக்கட்டுமே! உங்கள் தாய்மாமன் தான் உயர்ந்தவர் என்கிறார் விநாயகர். இதுகுறித்து ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய...” என்ற ஸ்லோகம் இருக்கிறது. இதற்கு எவருக்கு மாமா மகாவிஷ்ணுவோ என்று பொருள். வார்த்தை வார்த்தையாக பார்த்தால் ஸ்ரீ என்பது மகாலட்சுமி, காந்தோ என்பது காந்தன் எனப்படும் மகாவிஷ்ணு, யஸ்ய என்றால் எவருக்கு. விநாயகருக்கு மாமா மகாவிஷ்ணு. விநாயகரின் அன்னையான பார்வதிக்கு சகோதரர். இவருக்கு தன் மருமகன் விநாயகரை மிகவும் பிடிக்கும். இந்த ஸ்லோகத்தில் ஜநநீ ஸர்வமங்களா என்ற பெயர் வருகிறது. அதாவது நம்மை படைத்தவளும், சர்வமங்களம் கொண்டவளுமான பார்வதி புத்திரர் என்று வருகிறது. தொடர்ந்து இதே ஸ்லோகத்தில் அவரது தந்தை சிவன் பற்றி வருகிறது. ஆக, முதல் மரியாதை தாய் மாமாவுக்கே தரப்பட்டுள்ளது. விநாயகருக்கே இப்படி என்றாகும் போது, உலக மக்களான நாம் தாய்மாமாவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தால், உடனே அதை மறந்து விட்டு இன்றே பழம் விட்டு விடுங்கள்.