பதிவு செய்த நாள்
07
செப்
2016
11:09
எம்.ஜி.ஆர்., நகர்: பள்ளி எதிரே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, பள்ளி மாணவர்கள், விநாயகரிடம் புகார் மனு அளித்துள்ளனர். நெசப்பாக்கம், ஏரிக்கரையில் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளியின் எதிரே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. அந்த கடை, பள்ளி மாணவர்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளதால், கடையை அகற்றக் கோரி பல முறை பகுதிவாசிகள் போராட்டம் நடத்தினர். ஆனால், எந்த பயனும் இல்லை. இந்த நிலையில், நேற்று மாலை, 6:00 மணியளவில், எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் எதிரே இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள சித்தி முத்தி சக்தி விநாயகரிடம், டாஸ்மாக் கடையை மூட கோரி மாணவர்கள் மனு அளித்து, பிரார்த்தனை செய்தனர்.