ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீவி., ரோட்டில் உள்ள ஆதிவழிபடு விநாயகர் கோயிலில் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 29 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.கோயிலை சுற்றி சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. மாலை விநாயகர் சிலைகளைஅலங்கார வாகனத்துடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துசென்று கண்மாயில் கரைத்தனர். ஏற்பாடுகளை நற்பணி மன்ற தலைவர் ராமராஜூ செய்தார்.