கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு அருகில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் அருள்பாலிக்கிறார் மரகத விநாயகர். இவர் பச்சை நிறத்தில் காட்சி தருவதால் இந்தப் பெயர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் விக்ன நிவாரண கணபதி, திருமஞ்சன கணபதி, சவுபாக்ய கணபதி, சந்தான கணபதி சக்தி கணபதி, வரசித்தி கணபதி, பிரசன்ன கணபதி, இஷ்ட சித்தி கணபதி, துண்டீர மகாராஜ கணபதி, சிந்தூர கணபதி மற்றும் சன்னதி வீதியில் எலேல விநாயகர் என ஏகப்பட்ட கணபதிகள் அருள்பாலிக்கின்றனர்.