பெண்ணாடம்: விநாயகர் சதுார்த்தியொட்டி, பெண்ணாடம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கடந்த 5ம் தேதி விநாயகர் சதுார்த்தியொட்டி, கோவில்கள் மற்றும் தனியார் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். மூன்றாம் நாளான நேற்று முன்தினம், பெண்ணாடம் அடுத்த அரியராவியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு, காலை 10:00 மணியளவில் சிறப்பு பூஜை நடந்தது. பகல் 12:00 மணியளவில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலை, அருகில் உள்ள ஏரியில் கரைக்கப்பட்டது. அதேபோல், கோட்டைக்காடு வெள்ளாறு, பெலாந்துறை அணைக்கட்டு உள்ளிட்ட நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.