பழநி கோயில் உண்டியல் வசூல், ஒரு மாதத்தில், ஒரு கோடி 37 லட்சத்தை எட்டியது. உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக் கோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. வசூல் விபரம்: ஒரு கோடி 36 லட்சத்து 69 ஆயிரத்து 37 ரூபாய். தங்கம்- 964 கிராம். வெள்ளி- 5105 கிராம். வெளிநாட்டு கரன்சிகள்- 531. தங்க, வெள்ளி வேல், மாங்கல்யம், மோதிரம், பித்தளை பொருட்கள். கோயில் இணை கமிஷனர் ராஜா, துணை கமிஷனர் மங்கையர்கரசி, உதவி கமிஷனர் நடராஜன் பங்கேற்றனர்.