வாமனருக்கு ‘தீர்த்த பாதா’ என்னும் சிறப்புப் பெயருண்டு. புனிதமான தீர்த்தத்தை பாதத்தில் உடையவர் என்பது இதன் பொருள். வாமனர் உலகத்தை அளப்பதற்காக தன் திருவடியை துõக்கிய போது, அது பிரம்மாவுக்குரிய சத்திய லோகத்தை அடைந்தது. அதை தரிசித்த பிரம்மா புனித நீரால் அபிஷேகம் செய்து ஆராதித்தார். அது மழை போல் பொழிந்து கங்கையாய் ஓடியது. இதன் அடிப்படையில் வாமனர் சரித்திரம் படித்தால் போதுமான மழை பெய்யும் என்று ஐதீகம் வகுத்தனர். இது போல, விஷ்ணுவின் விஸ்வரூபத்தை வர்ணிக்கும் கீதையின் 11ம் அத்தியாயம், மகாபாரதத்தின் விராடபருவம் ஆகியவற்றைப் படித்தாலும் மழை வரும் என்பர்.