மகாபலி சக்கரவர்த்தி வாமனராய் வந்த திருமாலுக்கு மூன்றடி நிலம் கொடுக்க முடிவெடுத்தான். திருமால் உலகளந்த பெருமாளாக உயர்ந்து நின்று இரண்டடியால் உலகளந்து விட்டு, ‘மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?’ என்று கேட்டார். உடனே மகாபலி தன் தலையைக் கொடுத்தான். தன் திருவடியை அவனது பாதத்தில் ஊன்றிய பெருமாள், அவனை அழுத்தி பாதாள உலகிற்கு அனுப்பி விட்டார். அவர் மகாபலியைக் கொல்லாமல் விட்டதற்கு காரணம் உண்டு. அவனது தாத்தா பிரகலாதனிடம் விஷ்ணு, “அசுர குலத்தவராக இருந்தாலும், என் மீது பக்தி கொண்ட காரணத்தால் இனி உன் வம்சத்தில் பிறக்கும் அசுரர்களை கொல்ல மாட்டேன்” என்று வாக்களித்திருந்தார். அவர்களின் வம்சத்தில் பிறந்த பாணாசுரனுக்கு கைகளை மட்டும் துண்டித்து தண்டனையளித்தார். மகாபலியையும் பாதுகாத்தார்.