சில குழந்தைகள் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் அடம் பிடிப்பார்கள். படிக்கவோ, ஹோம் ஒர்க் செய்யவோ மறுப்பதுண்டு. இவர்கள் திருந்துவதற்காக அம்மாக்கள் சொல்ல வேண்டிய மந்திரம் ஒன்று இருக்கிறது. வாமன மூர்த்தியின் தாய் அதிதியால் சொல்லப்பட்ட இது பாகவதத்தில் உள்ளது.
“யக்ஞேச யக்ஞ புருஷாச்யுத தீர்த்தபாத தீர்த்த ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயா” இதைச் சொல்ல முடியாதவர்கள்“ யாகம் மூலம் வழிபடப்படுபவரே! யாகங்களின் தலைவரே! புனிதமான தீர்த்தங்களை திருவடியில் உள்ளவரே! கல்யாண குணங்கள் கொண்டவரே எம்மைக் காத்தருள் வாயாக” என்ற பொருளைச் சொல்ல வேண்டும். தினமும்இதை சொன்னால் பிள்ளைகள் புத்திசாலிகளாக திகழ்வதோடு பெற்றோருக்கும் பெருமை சேர்ப்பர்.