கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருமாலின் ஐந்தாவது அவதாரமான வாமனப்பெருமாளை எண்ணி நம்மாழ்வார் பாடிய பாடல்களை ஓண நாளில், பூக்கோலமிட்டு படித்தால் செல்வம் சேரும். திருமணம் கைகூடும். மழலைப்பேறு வாய்க்கும். பாவம் பறந்தோடும். ஓகோவென்று வாழலாம்.உருகுமால் நெஞ்சம் உயிரின் பாரமன்றிபெருகுமால் வேட்கையும் என்செய்கேன்தொண்டனேன்தெருவெல்லாங் காலிகழ் திருக்காட்கரைமருவிய மாயன்றன் மாயம் நினைதொறே.நினைதொறும் சொல்லும் தொறும்நெஞ்சிடிந்துருகும்வினைகொள் சீர்பாடிலும் வேமெனதாருயிர்கனைகொள் பூஞ்சோலைத்தென்காட்கரையென்னப்பாநினைகிலேன் நானுனக்கு ஆட்செய்யும்நீர்மையே.நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்துஎன்னைஈர்மைசெய்து என்னாயிராம் என்னுயிருண்டான்சீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன்கார்முகில் வண்ணன்றன் கள்வமறிகிலேன்.அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்கநெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்வெறிகமழ் சோலைத் தென்காட்கரையென்னப்பன்சிறிய வென்னாயிருண்ட திருவருளே.திருவருள் செய்பவன் போல என்னுள் புகுந்துஉருவமுமாருயிரும் உடனே யுண்டான்திருவளர் சோலைத் தென்காட்கரையென்னப்பன்கருவளர்மேனி என்கண்ணன் கள்வங்களேஎன்கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிதுபுன்கண்மை யெதிப் புலம்பி இராப்பகல்என்கண்ணன் என்று அவன் காட்கரையேத்துமே.காட்கரையேத்தும் அதனுள்கண்ணாவென்னும்வேட்கை நோய்கூர நினைந்து கரைந்துருகும்ஆட்கொள்வானொத்து என்னுயிருண்டமாயனால்கோட்குறைபட்டது என்னாருயிர் கோளுண்டே.கோளுண்டானன்றி வந்து என்னுயிர்தானுண்டான்நாளுநாள் வந்து என்னை முற்றவும்தானுண்டான்காள நீர்மேகத் தென்காட்கரை யென்னப்பற்குஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டதே. ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டதுபேரிதழ்த் தாமரைக்கண் கனி வாயதோர்காரெழில் மேகத் தேன்காட்கரைகோயில் கொள்சீரெழில்நால் தடந்தோள் தெய்வவாரிக்கே.வாரிக் கொண்டு உன்னைவிழுங்குவன் காணிலென்றுஆர்வற்றவென்னை யொழிய என்னில் முன்னம்பாரித்து தானென்னை முற்றப் பருகினான்காரொக்கும் காட்கரையப்பன் கடியனே.