பதிவு செய்த நாள்
13
செப்
2016
11:09
சிங்கபெருமாள்கோவில் : சிங்கபெருமாள்கோவிலில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் திரு பவித்ர உற்சவம், நேற்று நடைபெற்றது. சிங்கபெருமாள்கோவிலில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், திருபவித்ர உற்சவம், ஆவணி மாதம், நடை பெறும். இந்த ஆண்டிற்கான திருபவித்ர உற்சவ விழா நேற்று, துவங்கி, வரும் 16ம் தேதி வரை, நடைபெறுகிறது. காலை உற்சவ மூர்த்தி பிரகலாதவரதருக்கு, திருமஞ்சனம், சிறப்பு யாகம் நடந்தது. விழா நாட்களில், காலையிலும், மாலையிலும் சிறப்பு யாகம் நடைபெறும். இந்த சிறப்பு யாகத்தில், பொதுமக்களும் கலந்து கொண்டு, நரசிம்மரின் அருள்பெறலாம்.