பொள்ளாச்சி: ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், திருவோணம் சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி, காலை, 10:30 மணி முதல், 12:30 மணி வரை ரெங்கநாத பெருமாளுக்கும், தாயாருக்கும் ஒன்பது வகை அபிேஷக பூஜைகள் நடந்தன. ஒன்பது வகை பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.