பதிவு செய்த நாள்
15
செப்
2016
11:09
பந்தலுார்: நீலகிரியின் பல்வேறு பகுதிகளிலும், ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரியில் உள்ள பந்தலுார், கூடலுார் பகுதிகள், கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளதால், இப்பகுதிகளில் அதிகளவில் மலையாள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மக்களால், நேற்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள பொன்னானி மகா விஷ்ணு கோவில், எருமாடு மற்றும் வெள்ளேரி சிவன் கோவில், எருமாடு விஷ்ணு கோவில், வாளாட்டு சிவன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும், வீடுகளின் முன்பாக பூக்கோலம் போட்டு, குழந்தைகளும், பெண்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
* ஊட்டி ஐயப்பன் கோவிலில் காலை,6:30 மணிமுதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில் முகப்பு பகுதியில், வண்ணமயமான கோலமிடப்பட்டி ருந்தது. இதனை, உள்ளூரில் வசிக்கும் மலையாள மக்கள் பூக்களால் உருவாக்கினர். நீலகிரியில் நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந் ததால், உள்ளூர் மக்களும், தங்கள் குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றனர். சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகளவில் காணப் பட்டது.
* கேரள மாநில மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை, மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் வசித்து வரும் மலையாளி மக்களால் கொண்டாடப்பட்டது. உள்ளூரில் உள்ள நண்பர்களுக்கு,‘ஓணம் சத்யா’ எனப்படும் விருந்து அளிக்கப்பட்டது. மஞ்சூர் ‘பென்ஸ்டாக்’ உட்பட சில காட்சி முனை பகுதிகளில், கேரள சுற்றுலா பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர்.
*கோத்தகிரியில், மலையாள மக்கள் வசிக்கும் வீடுகளில் வ அத்தப்பூ கோலமிட்டு, மாவேலி மன்னனை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுக்கூடி, புத்தாடை அணிந்து சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர். பின்பு,நண்பர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்தனர்.