பதிவு செய்த நாள்
15
செப்
2016
11:09
திருப்பூர்: கூலிபாளையத்தில், ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர், நெருப்பெரிச்சல் அருகே கூலிபாளையத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில், திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழா, 13ம் தேதி துவங்கியது. மஹா சுதர்சன ஹோமம், பூர்ணாகுதி பூஜை முடிந்து, முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெற்றது. கோவிலருகே அமைக்கப்பட்ட யாகபூஜையில், முதல் கால யாக பூஜை துவங்கியது. இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. ÷ நற்று, அதிகாலை, 4:00 மணிக்கு, அக்னி சதுஸ்தானார்ச்சனம், இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, காலை, 6:15 மணிக்கு, மூலவ விமானம் மற்றும் கோபுரங்களுக்கு பட்டாச்சாரியர்கள் புனிதநீரால், கும்பாபிஷேகம் செய்தனர். அதன்பின், பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், மண்டல பூஜை நடைபெறுகிறது.
* அவிநாசி அருகே கருவலுõரில், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீ கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், திருப்பணி நிறைவுற்று, கும்பா பிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை அமைக்கப்பட்டு, இரண்டு கால பூஜைகள் நடைபெற்றன. நேற்று, காலை, 10:00 மணிக்கு, விமானம் மற்றும் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. விழாவில், குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ராஜகோபாலன், ஆறுமுகசாமி, சுகுமார், வெள்ளியங்கிரி மற்றும் கஸ்துõரி குல மக்கள், பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. அவிநாசி, கருவலுõர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.