பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கொண்டேகவுண்டன்பாளையம் கோவிலில், விநாயகருக்கு புதிய கவசம் அணிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, கொண்டேகவுண்டன்பாளையத்தில் சர்க்கரை விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள கிராம பெண்கள், விநாயகருக்கு கவசம் அணிவிக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, கோவில் விழாக்குழுவினர் ஆலோசனை செய்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, பித்தளை, செம்பு கலந்த கவசம் அணிவிக்க முடிவு செய்தனர். இதற்காக கிராமத்தில் வசிக்கும் பெண்களே முன்னின்று, நன்கொடை வசூல் செய்து சர்க்கரை விநாயகருக்கும், பீடத்துக்கும் கவச உடை தயார் செய்தனர். சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயக பெருமானுக்கு, 16 வகையான அபிேஷகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, விநாயகருக்கு கவசம் அணிவிக்கப்பட்டது. இதில், பெண்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.