எடையூர்: பிடாரி செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் அடுத்த எடையூர் கிராமத்தில், பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தேர் திருவிழாவை முன்னிட்டு, 7ம் தேதி, அம்மனுக்கு காப்பு கட்டி விழா துவங்கியது.நள்ளிரவு, 12:00 மணிக்கு, தேரில் அம்மன் எழுந்தருளினார். அதிர்வேட்டுகள் முழங்க, மேள, தாளங்கள் ஒலிக்க, தேரோட்டம் துவங்கி, எடையூர், மேட்டு வீரகுப்பம், பள்ள வீரகுப்பம் கிராமங்களுக்கு சென்று நிலைக்கு வந்தது. மாலையில், ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. மஞ்சள் நீராட்டு விழாவும், தெருக்கூத்தும் நடந்தது.