புரட்டாசி சனியன்று பெருமாளை வணங்கும் போது, “ பகவானே என்னைக் காப்பாற்று,” என்று சொல்லி வணங்குகிறோம். பகவான் என்பதை பகம்+ஆன் என்று பிரிக்கலாம். பகம் என்றால் ஆறு. ஆன் என்றால் உடையவன். ஆறு குணங்களை உடையவர் பெருமாள். நானே எல்லாம் என்கிற ஞானம், உலகத்தை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கும் பலம், உலகிலுள்ள செல்வத்துக்கெல்லாம் சொந்தமாகிய ஐஸ்வர்யம், எதையும் வெற்றி கொள்ளும் தைரியம், உலகத்திலுள்ள கிரகங்கள், பொருட்களை அந்தந்த இடத்தில் இருந்து மாறவிடாமல் செய்யும் ஆற்றல், சூரிய, சந்திரர் போல ஒளிவீசும் தேஜஸ் (ஒளி) ஆகியவையே அந்த குணங்கள். ஞானம், பலம், வீரியம், ஐஸ்வர்யம், ஆற்றல், தேஜஸ் ஆகிய ஆறு குணங்களுக்கு அதிபதி என்பதே பகவான் என்பதன் விளக்கம்.