எல்லைப்பிடாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ. 3.56 லட்சம் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2016 12:09
சேலம்: சேலம், எல்லைப்பிடாரியம்மன் கோவில் உண்டியல் நேற்று எண்ணப்பட்டதில், 3.56 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சுகவனேஸ்வரர் கோவில் துணைகோவிலாக குமாரசாமிப்பட்டியில் எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள, மூன்று நிரந்தர உண்டியல்கள் உதவி ஆணையர் அங்கம்மாள் முன்னிலையில், நேற்று திறக்கப்பட்டன. சுய உதவிக்குழு மகளிர் மற்றும் பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், மூன்று லட்சத்து 56 ஆயிரத்து 506 ரூபாய், எட்டு கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.