பதிவு செய்த நாள்
21
செப்
2016
12:09
ஊத்துக்கோட்டை: பவானியம்மன் கோவிலில், இன்று (21ம் தேதி) 26ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் கிராமத்தில் உள்ளது பவானியம்மன் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. ஆடிமாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 13 வாரங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை வழிபடுவர். இக்கோவிலில், செப்டம்பர் மாதம், மூன்று ஞாயிற்றுக்கிழமை முடிந்து வரும், புதன்கிழமையில் பவானி நகர், வேப்பிலை வியாபாரிகள், பெரியபாளையம் அம்பேத்கர் நகர், தண்டுமா நகர், அரியபாக்கம், அருந்ததியர் நகர் ராள்ளபாடி, எல்லாபுரம் ஆகிய பகுதி மக்கள் சேர்ந்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். இந்தாண்டு இன்று (21ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, பெரியபாளையம் தர்மராஜா கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடையும். முன்னதாக கிராம மக்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவர்.