ராமநாதபுரம் : மண்டபம் அம்பலகாரத் தெரு கூனி மாரியம்மன், மண்டபம் முகாம் உமையாள்புரம் உமயநாயகி அம்மன், பாம்பன் தெற்குவாடி இலங்கை முத்து மாரியம்மன், வாலாந்தரவை தேவர் நகர் ஆதிபராதி அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா செப்., 6ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. செப்., 13, 14ல் முளைப்பாரி விழா நடந்தது. இதைத்தொடர்ந்து இக்கோயில்களில் குளுமை பொங்கல் விழா நடந்தது. சிறப்பு அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மண்டபம் அம்பலகாரத்தெரு கூனி மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் மற்றும் விழாக்குழு நிர்வாகிகள் செய்தனர்.