Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொலு பொம்மைகள் விற்பனை ஜோர் மூங்கில்பட்டியில் புரவி எடுப்பு விழா மூங்கில்பட்டியில் புரவி எடுப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையில் மழை வேண்டி வினோத திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2016
12:09

மானாமதுரை, மானாமதுரையில் மழை வேண்டி புரட்டாசியில் எல்லைப் பிடாரியம்மனுக்கு மட்டன், சிக்கன், முட்டை, மீன், தீப்பந்தங்களுடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக வந்து விநோத திருவிழாவை கொண்டாடினர்.

Default Image
Next News

புரட்டாசியில் தமிழகத்தில் பெரும்பாலும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது வழக்கம். ஆனால் மானாமதுரையில் புரட்டாசி மாதத்தில் விரதமிருந்து அசைவ உணவு வகைகளை அம்மனுக்கு படைத்து வழிபடுகின்றனர். மானாமதுரை நகரை காக்கும் தெய்வம் எல்லை பிடாரி அம்மன்.இக்கோயிலில் புரட்டாசி மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை காப்பு கட்டி விரதமிருக்கின்றனர்.

ஒரு வாரம் விரதமிருந்த பக்தர்கள் புத்தம் புதிய மண் பானைகளில் மட்டன், சிக்கன், மீன், முட்டை, கொழுக்கட்டை, பணியாரம் ஆகிய உணவு வகைகளை சமையல் செய்து வர்ணம் தீட்டிய மண்பானைகளில் சாதத்துடன் சேர்த்து தலையில் சுமந்து ஊர்வலமாக வருகின்றனர். சாதத்தின் நடுவே தீப்பந்தத்தை கொளுத்தி வைத்து நகரின் அனைத்து வீதிகளின் வழியே வலம் வருகின்றனர்.இந்தாண்டு திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் விரதமிருந்த பக்தர்கள் அசைவ உணவு வகைகளுடன் ஊர்வலமாக அம்மன் கோயிலை வந்தடைந்தனர். அங்கு அசைவ உணவு வகைகளை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். வழிபாடு குறித்து கணேசன் கூறுகையில்: செவ்வாய் சாட்டு என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவில் மட்டன்,சிக்கன் ஆகியவற்றை வீட்டிலேயே சமைத்து மண்பாத்திரங்களை இட்டு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படையல் செய்து வழிபடுகிறோம். பொதுவாக கோயில்களில் தான் கிடா வெட்டி வழிபடுவது வழக்கம்.ஆனால் நாங்கள் வீட்டில் சமையல் செய்து கோயிலில் வந்து வழிபடுகிறோம்.இவ்வாறு செய்வதால் அம்மன் மனம் குளிர்ந்து மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar