அகத்தியர் ஒருமுறை வரமுனி என்ற தபஸ்வியைச் சந்திக்க வந்திருந்தார். இறுமாப்புடன் இருந்த வரமுனி, அவரைக் கண்டு கொள்ளவில்லை. மற்றவர்களைக் காட்டிலும் தனக்கு தவவலிமை அதிகம் என்ற அகந்தையே இதற்குக் காரணம். ஞானதிருஷ்டியால் விஷயம் அறிந்த அகத்தியர் கோபம் கொண்டு, “வரமுனியே! ஆணவம் ஒருவனை அழித்துவிடும். அடுத்தபிறவியில் நீ ஒரு மகிஷமாக(எருமை) கடவது” என்று சபித்தார். இதனால், ரம்பன் என்னும் அசுரனுக்கும், ஒரு பெண் எருமைக்கும் வரமுனி பிள்ளையாகப் பிறந்தார். ‘மகிஷன்’ என்று பெயரிட்டு வளர்த்தனர். மகிஷன் தவமிருந்து, தான் விரும்பும் பெண்ணைத் தவிர வேறு யாராலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் பெற்றான். அந்த வரத்தின் அடிப்படையில் துர்காதேவி மகிஷனை அழித்தாள்.