பதிவு செய்த நாள்
06
அக்
2016
11:10
பவானி: பவானியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில், 500 கொலு பொம்மைகள் வைத்து பூஜை செய்து வருகிறார். பவானி காமராஜ் நகர், கவுண்டர் நகர் பகுதியில் வசிக்கும் பிரகாசம் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி. இவர், தனது வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக நவராத்திரியை முன்னிட்டு, கொலு பொம்மைகளை வைத்து பூஜை செய்து வருகிறார். இந்தாண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த, 1ம் தேதி முதல் தனது வீட்டில், 46 படிகள் அமைத்து அதில் அறுபடை வீடு, ராமாயணம், நாம் அறிந்த நான்கு உலகம், திருமலை திருப்பதி கருடசேவை, கிருஷ்ணன் லீலை, தசாவதாரம், வாஸ்துலட்சுமி, வேளாண்மை, திருமண வரவேற்பு, பள்ளி வகுப்பறை, கண்ணன் விஸ்வரூப காட்சி, பெருமாளின் பல விதமான அவதாரம், அஷ்டலட்சுமி, சங்கீத மும்மூர்த்திகள், பள்ளி மாணவ, மாணவியரின் வகுப்பு அறைகள், விவசாயத்தில் தயாரிப்பு முதல் விற்பனை வரை, வாரசந்தை, கண்ணதாசனின் கண்ணன் நம் தோழன் என்பன உட்பட, 500 வகையான கொலு பொம்மைகள் வைத்து தினசரி காலை மற்றும் மாலை பக்தி பாடல்கள் பாடி துர்கா பூஜை நடத்தி வழிபாடு செய்து வருகிறார். கொலுவை பார்வையிடவும், வழிபாடு செய்யவும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.