பதிவு செய்த நாள்
08
அக்
2016
12:10
ப.வேலூர்: பொத்தனூர் மாரியம்மன் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, ஏழாம் நாளான நேற்று, உற்சவ அம்மன் பக்தர்களுக்கு தபசு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் மாரியம்மன் கோவிலில், நவராத்திரி ஏழாம் தினமான நேற்று, சிறப்பு பூஜை, வழிபாடு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நாள்தோறும், ஒரு சிறப்பு அலங்காரம் என, நவராத்திரியின் ஒன்பது நாட்களும், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏழாம் நாளான நேற்று, உற்சவர் அம்மனுக்கு தபசு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது. நவராத்திரி விழாவில், கரூரை சேர்ந்த, இரண்டாம் வகுப்பு படிக்கும், சிறுமி மிருதுளாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியினை, ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். ஆறரை வயதே ஆன, சிறுமியின் பரதநாட்டியத்தை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.