பதிவு செய்த நாள்
08
அக்
2016
12:10
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி, ஏரிக்கரை, திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் உள்ள, தூளியம்மன் சோலையப்பர் கோவிலில் உள்ள, ஸ்ரீதேவி, பூதேவி வெங்கடேச பெருமாளுக்கு, திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. அதற்காக, நேற்று காலை, கணபதி, தன்வந்திரி, சுதர்சன உள்ளிட்ட சிறப்பு ?ஹாமங்கள் நடந்தன. பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவில் பட்டச்சாரியார் ரவீந்திரன், ஸ்ரீதேவி, பூதேவி வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தார். இதை, ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதையொட்டி, பெருமாள் பெருமை என்ற தலைப்பில், சத்யராம் ஆச்சார்யார் சொற்பொழிவாற்றினார்.