Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வாகன யோகம் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி

பதிவு செய்த நாள்

12 அக்
2016
09:10

உழைப்பில் உறுதி மிக்க மேஷ ராசி அன்பர்களே!

புதன் நவ. 4ல் சாதகமான இடத்துக்கு வருகிறார். சுக்கிரன் நவ. 8ல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். 11ம் இடத்தில் இருக்கும் கேதுவால் நற்பலன் தொடரும். செவ்வாய் அக்.25ல் தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு மாறினாலும் நன்மை தர மாட்டார். சுக்கிரனால் ஆடம்பர வசதி பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். நவ.8 க்கு பிறகு பெண்களால் நன்மை உருவாகும். சூரியனால் அவப்பெயர் வரலாம் கவனம். குடும்பத்தில் புதனால் ஏற்பட்ட பிரச்னை நவ.3 க்கு பிறகு மறையும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். நவ.9,10ல் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும் அக்.17,18ல் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீண் அலைச்சல் அதிகரிக்கும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். அக்.25,26ல் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். வெளியூர் பயணத்தில் இனிய அனுபவம் உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தொழிலாளர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அக்.27,28,29ல் எதிர்பாராத வகையில் வருமானம் இருக்கும். அக். 19,20 , நவ.11,12, 15ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். அக்.25க்கு பிறகு மறைமுகப்போட்டி ஏற்படலாம்.

பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். ஆனால், அதற்கேற்ப வருமானம் கிடைக்கும். அனுபவசாலிகளின் அறிவுரையைக் கேட்டுப் பின்பற்றுவீர்கள். பணி விஷயமாக வெளியூர் செல்லும் கட்டாயம் ஏற்படும். விடாமுயற்சி செய்தால் சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. நவ.3க்கு பிறகு உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள்
ஒத்துழைப்புடன் இருப்பர்.

கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். தொழில்ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வர்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவர். கவுரவத்திற்காக பணம் செலவழிக்க நேரிடும். மக்கள்நலப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

மாணவர்கள் நவ.3க்குப் பிறகு புதன் சாதகமாக காணப்படுவதால் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை உதவிகரமாக இருக்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகள் மகசூல் சீராக இருக்கும். உழைப்பிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். அக்கம் பக்கத்தினரால் உதவி உண்டு. அக்.21,22ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
நவ.3க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். பிறந்த வீட்டு சீதனம் கிடைக்க வாய்ப்புண்டு.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு அக்.17,18,21,22,27,28,29,30,31,நவ. 6,7,8,9,10,13,14 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான விருச்சிகம் ராசியில் சந்திரன் நவ.1,2,3 ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம்: சிவப்பு,வெள்ளை

பரிகாரம்: தினமும் காலையில் சூரியனை வழிபடுங்கள். காளியை வழிபட்டால் கவலை அனைத்தும் நீங்கும். சனிக்கிழமைதோறும் சனீஸ்வரரை வழிபட்டு காக்கைக்கு அன்னமிடுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar