Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) வீடு வாங்க யோகம் மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குடும்பத்தில் குதுõகலம்
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குடும்பத்தில் குதுõகலம்

பதிவு செய்த நாள்

12 அக்
2016
10:10

உழைப்பால் உயர்ந்திடும் மீனம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் நவ.3 வரையும், சுக்கிரன் நவ. 8 வரையும், செவ்வாய் அக்.25ல் இருந்தும் நன்மை தருவார்கள். குரு, ராகு மாதம் முழுவதும் நற்பலன் அளிப்பர். இதனால் குடும்பத்தில் குதுõகலம் உண்டாகும். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். வாழ்வில் ஆடம்பர வசதி பெருகும். கடந்த மாதம் சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல், சோர்வு, வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வீட்டுக்கு தேவையான நவீன வசதிகள் பெருகும். அக்.18க்கு பிறகு புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். அக்.25க்கு பிறகு புதிய வீடு, மனை வாங்க யோகம் கை கூடி வரும். அக்.21,22ல்  உறவினர்கள் வகையில் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். அதே நேரம் நவ. 6,7,8 ல் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அக்.19,20, நவ.15ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

தொழில், வியாபாரத்தில் கடந்த கால உழைப்பிற்கான நற்பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அக்.17.18, நவ. 9,10,13,14 ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். அதே நேரம் அக்.25,26ல் எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்புண்டு.

பணியாளர்கள் வளர்ச்சிப் பாதையில் நடை போடுவர். சக பெண் ஊழியர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். மாத முற்பகுதியில் வேலையில் விழிப்புடன் இருப்பது நல்லது. நவ.5ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். நவ.3 க்கு பிறகு சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு உண்டாகலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். அக்.25க்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த
கோரிக்கையும் அவர்களுக்கு நிறைவேறும்.

கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். நல்ல நிறுவனங்களில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். நவ.8க்கு பிறகு மறைமுகப் போட்டி குறுக்கிடலாம்.

அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். அக்.25க்குப் பிறகு உங்களுக்கு வர வேண்டிய பரிசு, பாராட்டு குறைவின்றி கிடைக்கும். அக்.23,24ல் மனக்குழப்பம் ஏற்படலாம் கவனம்.

விவசாயிகளுக்கு வருமானத்தில் குறை இருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், நெல், கோதுமை போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். அக்.25க்கு பிறகு
புதிதாக நிலம் வாங்க வாய்ப்புண்டாகும்.

மாணவர்கள்கல்வியில் முன்னேற்றத்துடன் காணப்படுவர். இந்த மாதத்தை பொறுத்தவரை புதனால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்களின் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும். நவ 3 க்கு பிறகு படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கப் பெறுவர். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். அக்.27,28,29ம் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவதோடு பதவி உயர்வும் பெறுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். செவ்வாயால் ஏற்பட்ட பித்தம், உஷ்ண வியாதி அக்.25க்கு பிறகு மறையும். நவ.1,2,3ல் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம்.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு அக். 19,20,25,26, 27,28,29, நவ. 4,5,6,7,8,11,12,15 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான துலாம் ராசியில் சந்திரன் அக்.30,31ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசியுங்கள். தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். செவ்வாய்க்கிழமையில் முருகன் கோயிலுக்கு செல்லுங்கள். புதன்கிழமைகளில் பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். வெள்ளியன்று சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar