திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வீணை கச்சேரி நடந்தது. மதுரை ரேடியோ நிலைய வீணை இசை கலைஞர் மகேஸ்வரி தலைமையில் கச்சேரி நடந்தது. இசை ஆசிரியர் வெங்கட்ராமன் உள்பட பல வீணை இசை மாணவர்கள் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் கச்சேரியை ரசித்தனர்.