கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த பெரிய மோப்பிரிபாளையம் சேத்து மாரியம்மன் கோவிலில் கடந்த, 3ம்தேதி காப்பு கட்டுதலுடன் பூச்சாட்டு விழா துவங்கியது. தொடர்ந்து, அக்னி கம்பம் நடப்பட்டு, பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று, பெண்கள், சிறுமிகள் மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் இட்டு வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.