விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2016 12:10
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை நந்தி பகவானுக்கு 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை மூலவர், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில், முன் மண்டப வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு கொடிமரம் அருகே உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. வெள்ளிக் கவசத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை: தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தனர். இதில் இருந்து முதலில் தோன்றிய விஷத்திலிருந்து இந்த உலக உயிர்களை காப்பாற்றுவதற்கா சிவபெருமான் இந்த ஆலாகால விஷத்தை அருந்தினார். உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்த பிரதோஷ வேளையின்போது சிவன் நந்தயின் இரு கொம்புகளுக்கிடையில் நடனமாடுவதாக ஐதீகம். இதனடிப்படையில் தான் சிவாலயங்களில் நந்திக்கு பலவித அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலையில் பிரதோஷத்தன்று நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.