திண்டிவனம் : திண்டிவனத்திலுள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு யாக பூஜை நடந்தது. திண்டினம் மகளிர் போலீஸ் நிலையம் அருகே உள்ள கற்பக விநாயகர் கோவிலில், அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், சீரடி சாய் சக்தி கணேசா மண்டலி டிரஸ்ட் பகவான் ஷீரடி சாய்பாபா பட ஊர்வல நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று காலை பால் அபிஷேகமும், யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.