பதிவு செய்த நாள்
17
அக்
2016
12:10
விழுப்புரம்: தமிழக முதல்வர் ஜெ., பூரண நலமடைய வேண்டி, வளவனுாரில் அ.தி.மு.க.,வினர் பால் அபிஷேகம் செய்தனர். வளவனுார் அங்காளம்மன் கோவிலில், முதல்வர் ஜெ., பூரண நலமடைய வேண்டி பால்குட அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி துணை சேர்மன் நாராயணன் தலைமை தாங்கினார். மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த கற்பகம், வள்ளி, பானுமதி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது, மாவட்ட பிரதிநிதி மோகன்ராஜ், வார்டு பிரதிநிதி சாமிநாதன், பாவாடைசாமி, தேவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.