பதிவு செய்த நாள்
20
அக்
2016
12:10
ராசிபுரம்: ராசிபுரம், செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா, பூச்சாட்டுதலுடன் நேற்று முன்தினம் துவங்கியது. ராசிபுரம் தாலுகா, செல்லாண்டியம்மன், நித்யசுமங்கலி மாரியம்மன், ஆஞ்சயேர் திருவிழா ஆண்டு தோறும், ஐப்பசி மாதம் நடக்கிறது. இந்தாண்டு விழா நேற்று முன்தினம் இரவு, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இன்று இரவு, 12:00 மணிக்கு கம்பம் நடும் விழா, வரும், 31 நள்ளிரவு, 12:00 மணிக்கு பூவோடு பற்றவைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் நவ., 2ல், செல்லாண்டியம்மன் கோவிலில் அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல், அன்று இரவு, 10:00 மணிக்கு அக்னி குண்டம் பற்றவைத்தல் நடக்கிறது. நவ., 3 அதிகாலை, 5:00 மணிக்கு, அக்னி குண்டம் பிரவேசித்தல், மாலை, 4:00 மணிக்கு தேர் உற்சவம் நடக்கிறது. நவ., 5ல், நாதசுரக் கச்சேரி, வாணவேடிக்கைகள், நையாண்டி மேளத்துடன் சப்தாபரணமும் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.