பதிவு செய்த நாள்
20
அக்
2016
12:10
ஆர்.கே.பேட்டை: வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.பி.கண்டிகை கிராமத்தில் உள்ளது ருக்மணி, சத்யபாமா உடனுறை வேணுகோபால சுவாமி கோவில். ஓராண்டு காலமாக கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. பணிகள் முடிந்த நிலையில், நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் நடந்தது.
நேற்று காலை, இரண்டாம் யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, புனிதநீர் கலசங்கள் கோவில் மேல்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. ருக்மணி, சத்யபாமா உடனுறை வேணுகோபால சுவாமி சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.