பதிவு செய்த நாள்
24
அக்
2016
12:10
விழுப்புரம்: தமிழக முதல்வர் ஜெ., பூரண நலமடைய வேண்டி, விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் மகாராஜபுரம் நவதுர்கா கோவிலில், முதல்வர் ஜெ., பூரண நலமடைய வேண்டி, வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ராகுகால சிறப்பு பூஜை நடந்தது. மாவட்ட செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.பி., தலைமை தாங்கினார். விழுப்புரம் எம்.பி., ராஜேந்திரன், முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் கணேஷ்சக்திவேல் முன்னிலை வகித்தனர். இதில், முதல்வர் ஜெ., பூரண நலமடைய வேண்டி, அகல் விளக்கேற்றி ராகுகால சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது, முன்னாள் நகர செயலாளர் நுார்முகமது, மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எசாலம் பன்னீர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துரைசாமி, நகர கவுன்சிலர்கள் வழக்கறிஞர் செந்தில், செந்தில்குமார், அபிராமன், மணவாளன், ஜெ., பேரவை செயலாளர் சரவணன், இளைஞர் பாசறை துணை செயலாளர் ஜெகன், மகளிரணி துணை செயலாளர் தமிழ்செல்வி, நகர பேரவை துணை செயலாளர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண் டனர். ஏற்பாடுகளை மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல் செய்திருந்தார்.