காஞ்சி குமரகோட்டம் கோவில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2016 12:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காஞ்சிபுரம் குமர கோட்டம் முருகன் கோவில் பிரமோற்சத்திற்கு அடுத்து கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெறும். இதன்படி இன்று காலை, 6:30 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. முதல் நாள் காலை பல்லக்கு வாகனத்திலும், இரவு ஆடு வாகனத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் ராஜவீதிகளில் பவனி வருவார். ஒவ்வொரு நாளும் காலை, இரவு சுவாமி புறப்பாடு நடைபெறும். கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியாக, 5ம் தேதி சனிக் கிழமை இரவு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் தெய்வானை திருக்கல்யாணம் முடிந்து, வரும் திங்கள் கிழமையுடன் இந்த நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. பக்தர்கள் தினமும் நுாற்றுக்கணக்கானோர் வேண்டுதல் நிறைவேற்ற கோவிலை வலம் வந்து தரிசனம் செய்வர்.