பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி, சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. வெளி மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மனை வழிபட்டனர். இதையொட்டி நேற்றுமுன்தினம் இரவு முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், கரிவரதராஜப் பெருமாள் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.