பதிவு செய்த நாள்
01
நவ
2016
10:11
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். எதிரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கற்பூர தீபமேற்றி அம்மனை வணங்கினர். பூசாரிகளும், பக்தர்களும், அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். அப்போது, ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.