மயிலம் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா: தங்க கவசத்தில் சுவாமி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2016 05:11
மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவில் கந்த சஷ்டி விழா, கடந்த 31ம் தேதி துவங்கியது. இதை முன்னிட்டு நான்காம் நாள் விழாவில் காலை 6:00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடுகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால், சந்தன அபிஷேகம் நடந்தது. 12:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கந்த சஷ்டி முன்னிட்டு மவுன விரதம் இருக்கும் பக்தர்கள் தினசரி நடக்கும் சிறப்பு அபிஷேகம் தீபாரதனையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.