திண்டிவனம் : திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், சுதர்சன நவக்கிரக ஹோமம் நடந்தது. திண்டிவனத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், கடந்த 31ம் தேதி காலை ௯:௦௦ மணி முதல் பகல் ௧௨:௦௦ மணி வரை, சுதர்சன நவக்கிரக சாந்தி ஹோமம் நடந்தது. ஸ்ரீதர் ராகவ பட்டாச்சார்யா தலைமையில் நடந்த ஹோமத்தில் பக்தர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.