திருக்கோவிலூர் மணம்பூண்டி மூல பிருந்தாவனத்தில் ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2016 12:11
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ மணம்பூண்டி‚ ரகூத்தமர் மூலபிருந்தாவனத்தில் ஆராதனை விழா நடக்கிறது. உத்திராதிமடத்தின் குருவான ஸ்ரீ சத்யப்ரமோத தீர்த்த சுவாமிகளின் பிருந்தாவனம்‚ திருக்கோவிலுார் மணம்பூண்டி ரகூத்தமர் மூலபிருந்தாவன வளாகத்தில் அமைந்துள்ளது. தவ வலிமையால் வறண்ட பிரதேசத்தில் மழை பெtழிய செய்து‚ மழை சுவாமிகள் என பக்தர்களால் போற்றப்பட்ட சுவாமியின் 19ம் ஆண்டு ஆராதனை விழா, கடந்த 1ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம், அதிகாலை 5:30 மணிக்கு சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிேஷகம்‚ 8:00 மணிக்கு பண்டிதர்களின் கலந்துரையாடல்‚ 10:30 மணிக்கு பஞ்சாமிர்த
அபிேஷகம்‚ அலங்காரம் நடந்தது. மகா தீபாராதனையை கூக்லி மடாதிபதி ஸ்ரீ ரகுவிஜயதீர்த்த சுவாமிகள் நடத்தி, வைத்தார். தொடர்ந்து வைகுண்ட ராமர் பூஜை‚ மாலை 6:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி பிருந்தாவனத்தை வலம் வந்தது. தொடர்ந்து 6:30 மணிக்கு தீபாராதனை‚ 7:00 மணிக்கு அஞ்சலி‚ அஸ்வினி குழுவினரின்‚ வீணைக்கச்சேரி நடந்தது. இரவு 8:00 மணிக்கு பண்டிதர்களின் உபன்யாசம் நடந்தது. விழாவின் நிறைவாக நேற்று மகா அபிேஷகம்‚ அலங்காரம்‚ தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பீடாதிபதி ஸ்ரீ சத்யாத்ம தீர்த்த சுவாமிகளின் உத்தரவின்படி, வித்வான் ஆனந்த தீர்த்தாச்சார்ய சிம்மலிகி செய்திருந்தார்.